மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட தடை.!

மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொடூர வைரசால் உலகம் முழுவதும் 1,67, 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் 6,606 இறந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தினமும் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அனைத்து கல்வி நிறுவனங்கள் வருகின்ற 31-ம் தேதி வரை மூட முதலமைச்சர் பழனிசாமி  நேற்று உத்தரவிட்டார்.

இந்தியாவில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மத்திய அரசு கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan