மற்ற மகிழுந்துக்களின் விற்பனையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மகிழுந்து…!!! மகிழ்ச்சியில் மகிழுந்து நிறுவனம்…!!!

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் சொகுசு கார்களில் முதலிடம் பிடிப்பது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் ஆகும்.இந்த ரக கார்கள்  ஏனைய கார்களின் விற்பனையைக்காட்டிலும்  இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இந்த  எம்.பி.வி. ரக கார் இருக்கிறது.இதுவரை  டிசம்பர் 2018இல் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்க சுமார் 11,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
Related image
இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் சுமார் ரூ.2200 கோடிக்கும் அதிகளவிற்க்கு இந்த ரக கார்களை விற்பனை செய்திருக்கிறது.தற்போது இந்தியாவில் எம்.பி.வி. வாகனங்களுக்கான சந்தையில் அதிகளவு போட்டி ஏற்பட்டுள்ளது.இதில்  புதுவரவு வாகனங்களான மஹிந்திரா மராசோ, மாருதி எர்டிகா போன்ற வாகனங்கள் அதிகளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் கூடிய  விரைவில் வெளியாக இருக்கும் ரெனால்ட் என்.பி.சி. உள்ளிட்ட வாகனங்கள் சந்தையில் அதிகளவு போட்டியை ஏற்படுத்தியிருக்கின்றன.இதில்
விற்பனையை பொருத்த வரை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு டிசம்பரில் இருமடங்கு அதிகளவு இன்னோவா க்ரிஸ்டா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
Related image
ஒட்டுமொத்த விற்பனையை பொருத்த வரை இன்னோவா க்ரிஸ்டா கார் சுமார் 80,000 அதிக யூனிட்களை கடந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த இன்னோவா க்ரிஸ்டா கார் இருவித டீசல் என்ஜின்கள் உள்ளன ,இதில் 2.4 லிட்டர் (5-ஸ்பீடு மேனுவல்) மற்றும் 2.8 லிட்டர் (6-ஸ்பீடு ஆட்டோமேடிக்) ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Related image
இந்த என்ஜின்கள் 150 பி.ஹெச்.பி. பவர், 343 என்.எம். டார்க் மற்றும் 174 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 360 என்.எம். டார்க் செயல்திறனில் இயங்குகிறது.கடந்த 2016 ஆண்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் ரூ.13.84 லட்சம் [எக்ஸ்-ஷோரூம், மும்பை,மகாராஷ்டிரா.] என்ற விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.20.78 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த தகவல்  ஏனைய வாகன நிறுவனங்களை சற்று  கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
DINASUVADU.
author avatar
Kaliraj

Leave a Comment