டாப் 25 இடத்தில் உள்ள மிக அபாயகரமான ஆப்ஸ்கள் (Apps)..!இவை உங்கள் மொபைலில் உள்ளதா?

டாப் 25 இடத்தில் உள்ள மிக அபாயகரமான ஆப்ஸ்கள் (Apps)..!இவை உங்கள் மொபைலில் உள்ளதா?

எல்லா காலக்கட்டத்திலும் நல்லது ஒன்று இருந்தால் கெட்டது என்பதும் கூடவே இருக்கும். நல்ல விஷயங்களை மனித மூளையால் அவ்வளவு விரைவில் பழகி கொள்ள இயலாது. ஆனால், கெட்ட விஷயங்களை மிக எளிதாக நமது மூளை சேமித்து வைத்து கொள்ளும். இதை சார்ந்த நுண்ணறிவியலை தான் நமது தொழிற்நுட்பங்களிலும் நாம் புகுத்தி வருகின்றோம்.

மனிதன் உருவாக்கிய தொழிற்நுட்பங்கள் பலவும் இந்த வகையை சேர்ந்ததாகவே உள்ளன. இதில் நமது மொபைலில் அதிக அளவில் உள்ள ஆஃப்ஸ்கள் அடங்கும். இன்றைய கால கட்டத்தில் இந்த வகை ஆப்ஸ்கள் மனித இடத்திற்கே எச்சரிக்கை விடுப்பதாக உள்ளன. உங்களின் மொபைலில் எப்போதுமே பதிவிறக்கம் செய்ய கூடாத டாப் 25 ஆப்ஸ்கள் எவை என்பதை தவறாமல் அறிந்து கொண்டு, உஷராக இருங்கள்!

கியூ ஆர் கோட்
இன்றைய தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியில் எல்லாவற்றிலும் QR Code வசதி வருகின்றன. இதை ஸ்கேன் செய்ய சில ஆப்ஸ்களை ஒரு போதும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், இது போன்ற ஆப்ஸ்கள் உங்களது வங்கி கணக்குக்கள், மேலும் சில தகவல்களை திருட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவற்றில் சில ஆப்ஸ்கள்…
QR Code Scanner Pro
QR Code / Barcode Free Scan
QR Code Free Scan
QR Code Scan Best

இலவசம் தவிர்ப்பீர்
எதை இலவசமாக கொடுத்தாலும் வாங்கி கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. இந்த பழக்கம் தொழிற்நுட்பத்தையும் விட்டு வைக்கவில்லை. இலவசமாக கிடைக்கும் வை-பை-களை நாம் பயன்படுத்துவதால் உங்கள் மொபைல் உங்களுகே எதிரியாக மாறி விடும். இவற்றில் சில ஆப்ஸ்கள்…
Free WiFi Connect
Master Wifi Key
WiFi Security Master – WiFi Analyzer, Speed Test
Free WiFi Connect

வேகம்
மொபைல் அதி வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக Speed Booster போன்ற ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்வோம். இந்த வகை ஆப்ஸ்கள் உங்கள் மொபைலின் செயல்திறனை பாதிப்பதோடு, தகவலையும் திருடி கொள்ளுமாம். இவற்றில் மேலும் சில…
Memory Cleaner & CPU Task Manager
Battery Saver – Bataria Energy Saver

சுத்தம்
மொபைலில் எந்த வித காச்சி மெமோரியும் இருக்க கூடாது என்கிற உங்களின் எண்ணம் சரி தான்.
ஆனால், அதற்காக கீழ்க்கண்ட ஆப்ஸ்களை என்றுமே பயன்படுத்தாதீர்கள். இவை மிக மோசமான பாதிப்பை உங்களுக்கு தருமாம்.
Realtime Cleaner
Dr. Clean Lite
Clean Droid

பல வகைகள்
பொதுவாக கணினியில் ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் இருப்பது போன்று, மொபைலுக்கென்று ஒரு சில ஆஃப்ஸ்கள் பிளே ஸ்டோரில் உள்ளன. ஆனால், இவற்றில் பதிவிறக்கம் செய்ய கூடாத ஆப்ஸ்கள் கீழுள்ளவை தான்.
Virus Cleaner Antivirus
Antivirus – Security
Antivirus Clean
Security Antivirus 2019
Max Security – Antivirus & Booster & Cleaner

கால் ரெகார்ட்
கால் ரெகார்ட் செய்யகின்ற பல ஆப்ஸ்கள் உங்களின் முழு விவரத்தையும் உங்களிடம் இருந்தே திருடி கொள்கின்றன. இதில் சில ஆபத்தான ஆப்ஸ்கள் இதோ.
Call Recorder Pro
Call Recording Manager

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *