நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்

நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். பிரபல

By Fahad | Published: Apr 05 2020 10:54 AM

நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், தமிழ் சினிமாவில் ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பார்த்திபனின் ட்வீட்டர் பக்கத்தில், உடுமலை சாஜகான் சாதிக் என்பவர், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் செம மாஸாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு பதிலளித்த பார்த்திபன், 'நண்பன் படத்தை என்னை தான் முதலில் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்.' என பதிலளித்துள்ளார்.

Related Posts