இன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்!

Today's headlines from 6am to 6pm today!

அருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்?

அருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்? தொடர்ந்து அருண் ஜெட்லீயின் உடல் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. நேற்று இரவுதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அருண் ஜெட்லீ உடல் நலம் விசாரித்தனர் மேலும் படிக்க...

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினர்!

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினர் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கபில் மிஸ்ரா பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனால் இவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் படிக்க...

ஜம்முவில் மீண்டும் 2G இணைய சேவை தொடக்கம் !

kashmir 2g காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு பிரிப்பிக்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மற்றும் இணைய சேவையானது முற்றிலுமாக முடக்கப்பட்டது. இன்று மீண்டும் 2ஜி இணைய சேவையானது வழங்கப்பட்டுள்ளது . மேலும் படிக்க... டான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்ச சாண்டி மகள்! டான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே! சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்! வைரலாகும் வீடியோ! பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டி தனது காமெடியான பேச்சால், வீட்டிற்குள் போட்டியாளர்களையே தன் வசப்படுத்தியுள்ளார். சாண்டியின் மகள் அடடா மழைடா அடைமழைடா என்ற பாடலுக்கு நடமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது மேலும் படிக்க... பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு! இந்திய சினிமாவின் Mr.பிரமாண்டம்! சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இந்திய சினிமாவின் பிரமாண்ட சொத்து தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசிக்க படும் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு 56 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது மேலும் படிக்க...

கல்லணையில் இருந்து பாசனத்திற்க்காக காவேரி நீர் திறப்பு!

கல்லணையில் இருந்து பாசனத்திற்க்காக காவேரி நீர் திறப்பு! மேட்டூர் அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, சென்ற 13ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் நேற்று திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் பாசனத்திற்க்காக திறக்கப்பட்டுள்ளது மேலும் படிக்க...

சினிமாவில் வேண்டுமானால் கமல் முதல்வராகலாம்-அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!

சினிமாவில் வேண்டுமானால் கமல் முதல்வராகலாம்-அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் சினிமாவில் வேண்டுமானால் கமல் முதலமைச்சர் ஆகலாம் ,நிஜவாழ்க்கையில் முடியாது. முழுநேர அரசியல்வாதி எனக்கூறியவர் மீண்டும் சினிமா, தொலைக்காட்சியில் நடிக்கிறார் மேலும் படிக்க ...

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணசீட்டு வழங்கும் இயந்திரம் பழுது! இலவசப் பயணத்தால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணசீட்டு வழங்கும் இயந்திரம் பழுது! இலவசப் பயணத்தால் மக்கள் மகிழ்ச்சி! சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்  பயணிகளுக்கு, இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் படிக்க...  

Related News