இன்று நடத்துநர்.! நாளைய கலெக்டர்.? நிறைவேறுமா வாலிபரின் கனவு.?

இன்று நடத்துநர்.! நாளைய கலெக்டர்.? நிறைவேறுமா வாலிபரின் கனவு.?

  • கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வரும் 29 வயதுடைய மது என்பவர், தனது பணி நேரம் போக தினமும் 5 மணி நேரம் போட்டித்தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.
  • யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்விலும் வெற்றிப் பெற்றுள்ளார். வரும் மார்ச் மாதம் நேர்காணல் தேர்வு நடக்கவுள்ளது. இதில் தேர்ச்சிப் பெற்றால், நடத்துநர் பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக மாறிவிடுவார்.

கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வரும் 29 வயதுடைய மது என்பவர், தனது பணி நேரம் போக தினமும் 5 மணி நேரம் போட்டித்தேர்வுக்காக படித்து வந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை தேர்வில் வெற்றிப்பெற்றார். பின்னர் முதன்மை தேர்விலும் மது வெற்றிப் பெற்றுள்ளார். வருகின்ற மார்ச் மாதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதில் தேர்ச்சிப் பெற்றால், நடத்துநர் பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக மாறிவிடுவார். மது தனது குடும்பத்தில் முதல்முறையாக பள்ளிக்கு சென்ற நபர் என கூறப்படுகிறது. இவர் 19 வயதில் நடத்துநர் பணியில் சேர்ந்து இளநிலை, முதுநிலை படிப்புகளை தொலைத்தூர கல்வி மூலம் பயின்றுள்ளார்.

இந்நிலையில், இதற்கு முன் 2018-ல் தேர்வெழுதிய மது தோல்வி அடைந்தார். இரண்டாவது முயற்சியாக தற்போது முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். இவர் எந்த பயிற்சி  வகுப்புகளுக்கும் செல்லாமலே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் வீடியோக்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக மது தெரிவிக்கிறார். பின்னர் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஷிகா ஐஏஎஸ், மதுவுக்கு ஊக்கம் அளித்துள்ளார். ஐஏஎஸ் நேர்காணலுக்கு தயாராவதற்கு வழிகாட்டலையும் ஷிகா வழங்கி வருவதாக பெங்களுரு மிர்ரர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube