வீடு வீடாக சென்று ஊழியர்கள் இன்று மக்களிடம் உடல் பரிசோதனை.!

சென்னை, காஞ்சிபுரம் உள்பட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 10 மாவடங்களில் இன்று காலை முதல் யாருக்கேனும் இருமல், சளி, மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய  சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 41 பேருக்கு தொடர்புள்ள சென்னை, கோவை வேலூர், சேலம், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும். இவர்களில் காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்