இன்றைய (04.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். கடினமான சூழல் காணப்படும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

ரிஷபம் : இன்று நல்ல பலன் கிடைக்கும். நன்மையும் தீமையும் பிரித்து பார்க்கும் அனுபவ அறிவு இன்று இருக்கும். உறவுகளை சுமுகமாக வைத்திருங்கள்.

மிதுனம் : இன்று முன்னேறுவதற்கு பலன்கள் கிடைக்கும். அதற்கான ஆற்றலும் உற்சாகமும் இன்று உங்களிடத்தில் இருக்கும். முயற்சி வெற்றியை கொடுக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன் கிடைக்காது. லட்சியத்தை அடைய முழுமனதுடன் முயற்சி எடுக்க வேண்டும். விரைவாக செயல்படுங்கள். அது உங்களுக்கு பாதகமான சூழ்நிலையை தவிர்க்க உதவும்.

சிம்மம் : உங்களுக்கு விருப்பமான பலன் கிடைக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு திருப்தியான உணர்வு ஏற்படும். பிரார்த்தனை மன நிம்மதியை கொடுக்கும்.

கன்னி : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.  அதனால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.

துலாம் : வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.

விருச்சிகம் : உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டிய நாள். பொறுமையுடன் செயல்பட்டால் நன்மை கிடைக்கும். முயற்சி வெற்றியை தரும்.

தனுசு : இன்று உங்கள் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனம் நீங்கள் விரும்பும் இலக்கை அடைய உதவும். உங்கள் திறமை வெளிப்படும்.

மகரம் : இன்று துடிப்பான நாள். மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான மனநிலை வெற்றியை தேடித்தரும்.

கும்பம் : முடிவுகளை சற்று பொறுமையாகவும் அமைதியாகவும் எடுக்கவேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம் : குடும்ப பிரச்சினைகள் காரணமாக இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.