இன்றைய(23.01.2020) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..

  • இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.
  • நேற்றைய விலையில் இருந்து இன்று  விலை குறைந்தது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை அந்தநிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.54 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.71.70ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் இந்த விலை அமலுக்கு வந்தது.

author avatar
Kaliraj