வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவிட்டீர்களா ?இன்று கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று (31-8-2019) கடைசி நாள் ஆகும். இன்றுடன்

By Fahad | Published: Apr 06 2020 05:12 AM

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று (31-8-2019) கடைசி நாள் ஆகும். இன்றுடன்  வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம்  முடிவடைய உள்ளது.ஆனால் சமூக வலைதளங்களில், வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. இதற்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது .சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள் உண்மையில்லை என்றும் தெரிவித்தது. அதாவது இன்று வரித்தாக்கல் செய்ய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தது. எனவே  2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று (31-8-2019) கடைசி நாள் ஆகும். மாத சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியதாரர்கள், மூலதன ஆதாயம், தொழில் வருமானம் பெறுபவர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வரி செலுத்துபவர்கள் இன்று வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.