இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்!

தீரன் சின்னமலை ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1756-ம் ஆண்டு, ஏப்ரல்

By Fahad | Published: Mar 28 2020 11:19 AM

தீரன் சின்னமலை ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1756-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுரில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி. இவர் தாயார் பெயர் பெரியாத்தா. இவர், மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளை கற்று தேர்ந்துள்ளார். இவர் 1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சாலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை வெற்றி பெற்றார். இந்நிலையில், சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. இதனையடுத்து, சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார். இதனையடுத்து, ஆங்கிலேயர் போரில் சின்னமலையை வெல்ல முடியாது என அறிந்து, சின்னமலையை கைது செய்து, இவரை ஜூலை 31, 1805-ம் ஆண்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு சென்று போலி விசாரணை நடத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார்.

More News From theeran chinnamalai