மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்ட நாள் இன்று! அது என்ன திருப்புமுனை தெரியுமா?

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்ட நாள் இன்று! அது என்ன திருப்புமுனை தெரியுமா?

மஹாத்மா காந்தி அக்டொபர் மாதம் 2-ம் நாள், குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இவர் தனது வாழ்க்கையில்  சூழ்நிலைகளில் நேர்மையாக நடந்தவர். இவர் தனது 13 வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார்.

திருப்புமுனை

பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில்சிறிதுகாலம் பணியாற்றிய காந்தி, 1893-ம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால், தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் செய்தார். ஜூன் மாதம் 7-ம், 1893-ம் ஆண்டு இவர் ரெயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த போது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால், பயணம் செய்ய மறுக்கப்பட்டது.
இந்த நிகழ்வு அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியலில் ஈடுபாடின்றி இருந்த காந்தியை, இந்நிகழ்வு பெர்ம் அரசியல்வாதியாகவே மாற்றியது. இவரது அகிம்சைவழி போராட்டங்கள், சிறைவாசம், அர்ப்பணிப்புத்தன்மை தான் நாம் இன்று சுதந்திரமாக இந்த இந்திய தேசத்தில் வாழ்வதற்கு வழிவகுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube