இரு கருவில் பிறந்து ஓருயிராக வாழும் நண்பர்களின் தினம் நாளை!

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் என்பவர்கள் இரண்டு கருவில் பிறந்து ஒரு உயிராக வாழ்பவர்கள் தான் நண்பர்கள்.

இந்த உலகிலேயே மிக சிறந்த ஒரு உறவு நண்பர்கள் தான். இந்த உன்னதமான உறவு அனைவருக்கும் சரியான முறையில், அவர்கள் விரும்புகிற வண்ணம் கிடைப்பதில்லை. அதிலும் கூட, கடவுள் விதி என்ற ஒன்று எழுதியிருக்கிறாரோ? ஒரு சிலருக்கு உண்மையான நண்பர்கள் கிடைக்கிறார்கள். வேறு சிலருக்கு உண்மையான நட்புக்கு மாறான நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும் 

சோகத்தில் கண் துடைக்க 

வரும் கரங்கள் தான் நண்பர்கள் 

அந்த வகையில், இப்படி நண்பர்கள் கிடைத்திருந்தால் அவர்களுக்கு, நண்பன் ஒரு பெரிய வரம் என்று தான் எண்ண வேண்டும்.

உன் நண்பன் யாரென்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்பது பழமொழி. ஆனால், நம்மை பற்றி மற்றவர்கள் அறிய வேண்டும் என்றால், நம்மிடம் நெருக்கமாக பழகும் நண்பர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்கின்றனர் அல்லது நாம் பழகும் நண்பர்களின் குணநலன்களை பொருத்தும் நாம் எடைப்போடப்படுகிறோம்.

இந்த உலகில் பெற்றோர், பணம், கல்வி என எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒரு மனிதனை நாம் பார்க்கலாம். ஆனால், நண்பர்கள் இல்லாத மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

விழிகளில் வடியும் கண்ணீர்

இதயத்தை நனைத்திடும் முன்னே

விரைந்து துடைத்திடும் விரல்கள்…!

 ஏன்னென்றால்,எவ்வளவு பெரிய சொல்ல முடியாத பிரச்னை என்றாலும், அதை தன் நண்பனிடம் மட்டும் தான் கூறுவதுண்டு. ஏன்னென்றால், அவனுக்கு தெரியும், நாம் கண்ணீர் சிந்தும் போது நமது கண்ணீரை துடைக்கும் உண்மையான கரங்கள் நமது நண்பனின் கரங்கள் தான் என்று.

நண்பர்களின் நட்பு என்பது எப்போதுமே வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கிறது. சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கிறது. சில நேரங்களில் ஆசிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கிறது.

நமக்கு நல்ல நண்பர்கள் யார் என்றால், நமது வறுமையிலும் நமது கரத்தை பிடித்து, வருந்தாதே என கூறி நம்மை தேற்றுவது உண்மையான நட்பு. அந்த வகையில் நமக்கு கிடைத்த நண்பர்களுக்கு உண்மையாக இருப்போம். நமது நண்பர்கள் தடுமாறும் போது தாங்கி பிடிப்போம். தடம் மாறும் போதும் நேர்வழி காட்டுவோம். இதுவே உண்மையான நட்புக்கு அடையாளம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.