இன்று 52-வது பிறந்தநாள்.! அண்ணனிடம் சென்று வாழ்த்து பெற்ற கனிமொழி.!

எம்.பி  கனிமொழி இன்று தனது 52-வது வயதில் கால் அடியெடுத்து வைத்துள்ளார்.

By murugan | Published: Jan 05, 2020 01:44 PM

  • எம்.பி  கனிமொழி இன்று தனது 52-வது வயதில் கால் அடியெடுத்து வைத்துள்ளார்.
  • இந்நிலையில் கனிமொழி தனது அண்ணனும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுக மகளிரணிச் செயலாளரும் , தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 52-வது வயதில் கால் அடியெடுத்து வைத்துள்ளார்.இந்நிலையில் கனிமொழி தனது அண்ணனும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். கனிமொழி கடந்த இரண்டு ஆண்டுகளாக ( கருணாநிதி மறைவுக்கு பின் ) தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை குறைத்து கொண்டார். இதனால் கனிமொழி தனது பிறந்தநாள் அன்று பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு,பின்னர்  தனது அண்ணன் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வருகிறார். எம்.பி கனிமொழி தனது தந்தை கருணாநிதி இறந்த பிறகு தன்னுடைய பிறந்தநாள் கொண்டாடுவதை தவித்து கொள்ளுமாறு ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.  அது மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்ப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பே கனிமொழி அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc