இன்று ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினம்!

ஜப்பானில் உள்ள பெருநகரம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. இரண்டாம் உலக போரின் போது, ஆகஸ்ட் 6-ம் தேதி, 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த அணுகுண்டுவீச்சால் அப்பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் ‘லிட்டில் பாய்’. இந்த குண்டானது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிப்பெட்ஸ் என்பவரால், எனோலா கே என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இது அங்கு வீசப்பட்ட முதல் அணுகுண்டாகும்.

அதன் பின் குண்டு வீசப்பட்டு, மூன்றாவது நாளில் ‘கொழுத்த மனிதன்’ என்ற குண்டு நாகசாகி மீது வீசப்பட்டது. இந்த அணுகுண்டு வீச்சில், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். குண்டு விழுந்த இடத்திலிருந்து, ஐந்நூறு அடி சுற்றளவில் இருந்து அனைவரும் சாம்பலாக்கினார்.

இந்த குண்டு வெடிப்பில் ஹிரோஷிமாவில் 60 சதவிகித கட்டடங்கள் அழிந்து போயின. இந்த குண்டு வீச்சினால் பல நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். பலர் உடல் ஊனமடைந்துள்ளனர். மூன்றாவது நாள் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டினால் 74,000 பேர் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலக போரில் இந்த மாபெரும் அழிவு ஏற்படாமலிருந்திருந்தால், இப்போர் முடிவுக்கு வந்திருக்காது என்றும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.