மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படடேல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்பொழுது காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படடேல் பேசுகையில்,சரத்பவார் எங்களை சந்தித்து பேசினார், நாங்கள் கூறிய முடிவில் மாறவில்லை.ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரசால் எந்த தாமதமும் ஏற்படவில்லை.
மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். பா.ஜ.க. அனைத்து நிலைகளையும் கடந்து விட்டது. ஜனநாயகத்திற்கு இது மிகப் பெரிய அவமானம்.
சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பா.ஜ.க.வைச் சந்திப்போம்.அனைவரும் இணைந்து பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுப்போம்.ஆட்சி அமைப்பதற்கு உண்டான எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க காரணம் என்ன ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.