வரலாற்றில் இன்று(11.01.2020).. பிரிட்டிஷ் இந்திய ஆளுநர் கர்சன் பிரபு பிறந்த தினம் இன்று..

  • இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்க்களை மேற்கொண்ட ஆங்கிலேய ஆளுநரின் பிறந்த தினம் இன்று.
  • இவரது பிறந்த நாளில் இவரை நினைவு கூறுவோம்.

சுதந்திரத்திற்க்கு முந்தய இநதியாவின் அரசியலமைப்பு, கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை புரிந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கர்சன் பிறந்த தினம் இன்று. இவர்,  ஜனவரி மாதம் 11 ம் நாள் 1859ஆம் ஆண்டு  பிறந்தார், இவர், 1899ம் ஆண்டு முதல்  1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றியவார்.பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். இவர் ஒரு முழுமையான பேரரசு கொள்கையாளர். ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார். கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தம் , காவல் அதிகாரிகளுக்கான பயிற்ச்சி பள்ளி என பல்வேறு சீர்திருத்தங்களை நிகழ்த்தினார். இத்தகைய சிறப்பு செய்த இவரை இவரது பிறந்த நாளில் நினைவு கொள்வோம்.

author avatar
Kaliraj