வரலாற்றில் இன்று(09.01.2020).. மரபணுக்களை முதலில் உற்பத்தி செய்து நோபல் பரிசு வென்ற இந்தியர் பிறந்த தினம்..

  • செயற்கை முறையில் மரபனுக்களை உற்பத்தி செய்து  நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர் ஹர் கோவிந்த் குரானா எனும் அறிவியல் அறிஞரின் பிறந்த தினம் இன்று.
  • இவரது பெருமையை போற்றி நினைவு கூறுவோம்.

இவரது சிறப்புகள்:

சுதந்திரத்திற்க்கு முன், அதாவது பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் பகுதியில் ஜனவரி மாதம் 9ம் நாள் பிறந்தார் குரானா. இவரது தந்தை கிராம அலுவலக உதவியாளராக  ஆங்கிலேய அரசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.குரானா  பஞ்சாப் பல்ககலைகழகத்தில் ‘லிவர் பூல்’ என்று படித்து கலக்கினார்.

Related image

மேலும், இவர்  இயற்பியலில் பட்டம் பெற்று துவங்கிய இவரின் வாழ்க்கை மூலக்கூறு உயிரியல் (மாலிகுலர் பயாலஜி ) துறையில் ஆய்வுகள் செய்வதிலேயே  அதிக நாட்களை கழித்தார்.. அதிலும் மரபுப்பொருளான  ஆர்.என்.ஏ. பற்றிய ஆய்வுகளுக்கு தான் இவருடன் மேலும் இருவருக்கும் சேர்த்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது ஆராய்ச்சியானது, உயிர்கள் உடலுறவு கொண்டு தங்களின் சந்ததியை உருவாக்குகின்றன  என்பது எல்லாருக்கும் தெரியும் .ஆணின் விந்துவும்,பெண்ணின் கரு முட்டையும் சேர்வது என்பது சரி ஆனால்,

Related image

அவைகளுக்குள் இணைப்பையும்  தலைமுறைகளின் பண்பையும் அடுத்த சந்ததிக்கு எப்படி  கடத்தப்படுகின்றன என்பது புரியாத புதிராகவே  இருந்தது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரெட்ரிக் மெய்ஷர் என்ற அறிவியலாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதன் தன்மையை தெரியாமலே ஒரு அற்புத பொருளை பிரித்து எடுத்திருந்தார் ,அந்த பொருளானது,  செல்லின் உட்கருவில் இருந்து எடுக்கப்பட்ட நியூக்ளீன் என அவர் அழைத்தார். இந்த நியூக்ளீன் தான் தற்காலத்தில் நியூக்ளிக் அமிலம் என அறியப்பட இருக்கும் அற்புதம்மரபியலின் தந்தை என அறியப்படும் கிரிகர் ஜோகன் மெண்டல் எனும் செக்  பாதிரியார் பட்டாணிகளின் வெவ்வேறு அம்சங்களை எடுத்துக்கொண்டு அதன் பண்புகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது ஒரு தெளிவான முறையில் நிகழ்வதை கண்டறிந்தார் ,

Image result for har gobind khorana

அந்த கடத்தியைதான்  தற்காலத்தில் ஜீன் என்றார்கள் . இந்த ஜீன் மற்றும் நியூக்ளிக் அமிலம் இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக பெரும்பாலான பேருக்கு தோன்றவில்லை .ஒருமுறை, ஆஸ்வால்ட் எனும் விஞ்ஞானி நோய் உண்டாக்கும் பாக்டீரியாவின் நியூக்ளிக் அமிலத்தை தீங்கு செய்யாத பாக்டீரியாவுக்கு செலுத்தும் போது அதுவும் நோய் உண்டாக்கும் தன்மையை பெற்றிருப்பதை கண்டார். இதன் மூலம் ஜீன்கள் நியூக்ளிக் அமிலத்தால் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அவர்  நிரூபித்தார் அவர். இதன் பின்புதான் மாலிகுலர் பயலாஜி என்னும் மூலக்கூறு உயிரியல்  என்கிற துறை உருவானது. நாம் வாழ்வதற்கு தேவையான அத்தனை வேதிவினைகளும் இதன் மூலமே நடக்கிறது.  சந்ததிகளை கடந்து பண்புகளை தொடந்து  கடத்தும் நியூக்ளிக்  அமிலம்  டி.என்.ஏ  புரத உருவாக்கத்தில் ஈடுபடும் மற்றும் ஒரு மரபுப்பொருளின்  பெயர் தான் ஆர்.என்.ஏ .

Image result for har gobind khorana

இந்த ஆர்.என்.ஏ   புரதங்கள் சார்ந்த ஆய்வில் தான் குரானா மற்றும்  நிரென்பெர்க் மற்றும் ஹோல்லி ஈடுபட்டார்கள். இவர்கள்  ஒரு எளிய நியூக்ளிக்  அமில மாதிரியை உருவாக்கி அதிலிருந்து வெவ்வேறு புரதங்களை படிக்கிற சாத்தியத்தை இவர்கள் கண்டறிந்து சாதித்தார் நிரென்பெர்க்.  மேலும் குரானா  நிரென்பெர்க் எளிமையாக செய்ததை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். மிகவும்  சிக்கலான புரதங்களின் கட்டமைப்பை கச்சிதமாக கண்டுபிடித்தார்.

Related image

இந்த செயல்களை சாதிக்கும் அதாவது  மரபை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது யார் என்கிற கேள்விக்கு transfer  ஆர்.என் .ஏ  என்று சொல்லக்கூடிய டி-ஆர்என்ஏ   என்று பதில் கண்டுபிடித்தார் ஹோல்லி. இந்த அரிய தகவலை கண்டறிந்த இந்த மூவருக்கும் நோபல் பரிசு கிட்டியது . மாலிகுலர்  பயலாஜி என்ற மூலக்கூறு உயிரியல்  துறை இதற்குப்பின் மிகப்பெரிய உச்சங்களை தொட ஆரம்பித்து மனிதகுலத்துக்கு பயன்பட ஆரம்பமானது.எனவே இந்த மாமனிதர்களின் நினைவை நினைவில் வைத்து போற்றுவோம்.

author avatar
Kaliraj