வரலாற்றில் இன்று(29.12.2019).. சார்லசு மேகிண்டோச் பிறந்த தினம்..

வரலாற்றில் இன்று(29.12.2019).. சார்லசு மேகிண்டோச் பிறந்த தினம்..

  • நீர் புகா ஆடையை கண்டுபிடித்த அறிஞரின் அபூர்வ ஆற்றல்.
  • வரலாற்றில் இன்று சார்லசு மேகிண்டோச் பிறந்த தினம் இன்று.

சார்லசு மேகிண்டோச் என்ற வேதியல் துறையில் சிறந்து விளங்கிய மேதை என்றே சொல்லலாம். இவர்,  டிசம்பர் மாதம் 29ம் நாள்  1766ம் ஆண்டு பிறந்த இவர் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகருக்கு சொந்தமானவர் ஆவர்.இவர் வேதியியல் துறையில்  நிபுனரும் மற்றும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரின் முக்கியமான  கண்டுபிடிப்பான நீர்ப்புகா துணி கண்டுபிடிப்பின் மூலம் பெரும்புகழ் பெற்றார் இவர். மேலும், இவர் சிறந்த  எழுத்தர் ஆவர், இந்த  பணியிலிருந்தாலும் கிடைக்கும் ஒரு சில நேரங்களில் அறிவியல், மற்றும் வேதியியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவராக இவர் இருந்தார். இதனால் தனது வேலையை விட்டு விட்டு  பல அறிவியல் சோதனைகளில் ஈடுபட்டார். இதில் பல வெற்றியும் பெற்றார். இவரின் கண்டுபிடிப்பில் மிகவும்  முக்கியமாக தார், நாப்தா போன்றவையும் அடங்கும். இத்தகைய பயன்பாட்டு கண்டுபிடிப்புகளை கொடுத்த இவர்  ஜீலை 25ம் நாள் 1843ம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube