வரலாற்றில் இன்று ( 14-12-2019) : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிடிபட்ட நாள்!

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட

By manikandan | Published: Dec 14, 2019 05:53 AM

  • ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று. 
  • ராணா டகுபதி, ஆதி, சமீரா ரெட்டி ஆகியோர் பிறந்ததினம் இன்று. 
ஈராக் நாட்டின் முன்னாள் பிரதமர் சதாம் உசேன் அமெரிக்க ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று. இவரது ஆட்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்ததாக கூறி இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரினை அடுத்து இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் தலைமறைவாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்திருந்தார். இவரை தேடும் பணியில் அமெரிக்க ராணுவமும் ஈடுபட்டது. அமெரிக்க ராணுவம் இதே டிசம்பர் 14ஆம் தேதி 2003ஆம் ஆண்டு திகரிக்கதிக்கு வெளியே உள்ள ஒரு பதுங்கு குழியில் இவரை கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அப்போதைய ஈராக் அரசு நவம்பர் 5, 2006ஆம் ஆண்டு இவரை தூக்கில் போட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இவர் அளித்த மேல்முறையீடு டிசம்பர் 26இல் ரத்து செய்யப்பட்டது. அதனை அடுத்து டிசம்பர் 30, 2006ஆம் ஆண்டு சதாம் உசேனை தூக்கிலிட்டனர். பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ராணா பிறந்ததினம் இன்று. நடிகர் ஆதி, நடிகை சமீரா ரெட்டி ஆகியோருக்கும் பிறந்தநாள் இன்று.
Step2: Place in ads Display sections

unicc