தினம் ஒரு திருப்பாவையின் இன்றைய தொடர்ச்சி

  • திருமணத்தடை அகல தினமும் படியுங்கள் .
  • கோதை நாச்சியார் அருளிய இன்றய மார்கழி மாத திருப்பாவை.

பாடல்:

ஓங்கி உலகளந்த உத்தமன் போர்பாடி

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கமும் மாரிபெய்து

ஓங்கு பெருஞ்செந்நே லூடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தோலோ ரெம்பாவாய்.

 

பாடல் விளக்கம்:

நெடியோன் திரிவிக்கிரமன் ஆக ஓங்கி வளர்ந்து உலகத்தை அளந்த உத்தமன் திருமாள்!  அவன் திருநாமங்களை பாடி நாம், நம் நோன்பு இருந்ததற்கான காரணத்தை கூறி நீராடுவோம்’ அவ்வாறு நீராடினால், தீமையில்லாமல் நாடெல்லாம் மும்மழை பெய்யும்; அதனால் நெற்பயிர் பருத்து வளரும், அந்த பயிர்கள் ஊடே கயல் மீங்கள் துள்ளித்திரியும், அளகிய குவலை மலர்களிலே புள்ளிவண்டுகள்  தேனை குடித்து மெய்மறந்து உறங்கும்,மாட்டு தொழுவத்தில் புகுந்து இருந்து அழகிய முலைகளை பற்றி இழுத்தால் தேக்கி வைத்துக்கொள்ள முடியாத அளவிற்க்கு பால் சுரந்து குடங்களை நிறைக்கும் வள்ளலின் இயல்பு வாய்ந்த பெரிய பசுக்கள்! இத்தகைய நீங்காத செல்வம் நிறையும்.

author avatar
Kaliraj