இன்றைய ராசிபலன் (ஏப்ரல் 7-ஆம் தேதி ) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்றைய (ஏப்ரல் 7-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது

By Fahad | Published: Apr 02 2020 06:06 PM

இன்றைய (ஏப்ரல் 7-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் நாள் ஆகும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்றைய நாள் உங்களுக்கு  சுபசெலவுகள் ஏற்படும் .தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள் ஆகும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

  Image result for மிதுன ராசி இன்றைய நாள் உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் அதிகரிக்கும் நாள் ஆகும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி
இன்றைய நாளில்  உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும் நாள் ஆகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி
இன்றைய நாளில்  உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள் .ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி இன்றைய நாளில் உங்களுக்கு  ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றைய நாள் உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும் நாள் ஆகும்.
  Image result for விருச்சகம் ராசி LOGO இன்றைய நாளில் உங்களுக்கு புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள் ஆகும்.

தனுசு ராசிக்காரர்கள்:

Image result for தனுஷ் ராசி

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும் நாள் ஆகும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும் நாள் ஆகும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Image result for கும்பம் ராசி

இன்றைய நாள் உங்களுக்கு  இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் உதவியுடன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும் நாள் ஆகும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு  செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது ஆகும்.