வரலாற்றில் இன்று (13.12.2019) இந்திய நாடாளுமன்றக் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நாள் .!

கடந்த  2001-ம் ஆண்டு டிசம்பர் 13 -ம்தேதி நாடாளுமன்றத்தில்  5 தீவிரவாதிகள்

By murugan | Published: Dec 13, 2019 06:13 AM

  • கடந்த  2001-ம் ஆண்டு டிசம்பர் 13 -ம்தேதி நாடாளுமன்றத்தில்  5 தீவிரவாதிகள் கையில் ஏகே47 ரக துப்பாக்கிகளுடன் தாக்குதல் நடத்தினர்.
  • இந்த தாக்குதலில்  பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
கடந்த  2001-ம் ஆண்டு டிசம்பர் 13 -ம் தேதி போலியான நாடாளுமன்றத்தின் அடையாள ஸ்டிக்கரை  ஒட்டி கொண்டு ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.  சம்பவத்திற்கு 40 நிமிடங்கள் முன்பு தான் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அப்போதைய உள்துறை அமைச்சர் லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அரசு அதிகாரிகளும் வளாகத்தில் இருந்தனர். தீவிரவாதிகள் தங்கள் வாகனத்தை  நாடாளுமன்ற வளாகத்தில்  இருந்த அன்றைய குடியரசு துணைத் தலைவர் திரு.கிருஷ்ண காந்த் அவர்களின் வாகனத்தின் மீது மோதி பின் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது தீவிரவாதிகள் கையில் ஏகே47 ரக துப்பக்கிகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் முதலியன இருந்தன.தீவிரவாதிகள், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ. எஸ். ஐ.-யின் வழிகாட்டலின் பேரில் இத்தாக்குதலை நிகழ்த்தியதாகத் தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறினர். குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பு காவலர்களும், பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுடத் தொடங்கினர். தீவிரவாதிகளை முதலில் கவனித்து எச்சரிக்கை கொடுத்த கமலேஷ் குமாரி என்ற மத்தியச் சேமக் காவல் படைக் காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதி ஒருவன் சுடப்பட்டபோது அவன் அணிந்திருந்த வெடிகுண்டு தாங்கிய தற்கொலை உடை வெடித்ததில் மேலும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஐந்து காவலர், ஒரு நாடாளுமன்ற பாதுகாவலர் மற்றும் ஒரு தோட்டக்காரரும் பலியாயினர். மேலும் பதினெட்டு பேர் காயமடைந்தனர். மொத்தமாக 14 பேர் இறந்தனர். மந்திரிகள், நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்திய ஐந்து தீவிரவாதிகளின் பெயர்கள் - 1. ஹம்ஸா, 2. ஹைதர் (எ) துஃபைல், 3. ராணா, 4. ராஜா மற்றும் 5. முகமது என்று தில்லி காவல்துறை தெரிவித்தது. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மௌலானா மசூத் அஸார், காஸி பாபா மற்றும் தாரிக் அகமது ஆகிய மூவரும்  இத்தாக்குதலுக்குத் திட்டம் திட்டியதாக நீதி மன்றம் அறிவித்தது.
Step2: Place in ads Display sections

unicc