பிரதமரின் நிவாரண நிதியை பற்றி கேற்ற மாணவிக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில் என்ன தெரியுமா.?

பிரதமரின் நிவாரண நிதியை பற்றி கேற்ற மாணவிக்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில் என்ன தெரியுமா.?

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது.

இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு நிதியை நிவாரணமாக வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அந்த பிரதமரின் நிவாரண நிதியை பற்றி  கல்லூரி மாணவி அபய் குப்தா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அந்நிவாரண நிதியில் இருந்து செலவிடப்பட்ட தொகை பற்றிய தகவலையும் கேட்டிருந்தார். இதற்கு பிரதமரின் அலுவலகம் பதிலளித்த தகவல் என்னவென்றால் பிரதமரின் நிவாரண நிதி அரசு அமைப்பு இல்லை என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி அதன் தகவல்களை பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமரின் நிவாரண நிதி தொடர்பான செய்திகளை அதற்கான இணையத்தில் பெற்று கொள்ளலாம் என பதிலளித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube