இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் ! பிரதமர் மோடியிடம் முதல்வர், துணை முதல்வர் கோரிக்கை

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர்  , துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்தது.மக்களவையில் 1 இடத்திலும் ,இடைத்தேர்தலில் 9 இடத்திலும் வெற்றிபெற்றது. அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் ,தமாக,புதிய நீதிக்கட்சி  உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்தது.அதிமுக தேனி மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.

தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது பாஜக கடும் அதிருப்தி அடைந்தது.இதனால் அதிமுக -பாஜக கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி எழுந்தது. இதன் பின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது பாஜக.

இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.