அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர்…..நெருப்பு வைத்து ரயில்களை இயக்கும் நிலை…!!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையனை குளிரை சமாளிக்க இரயில் தண்டவாளத்தில் நெருப்பை வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சில நாட்களாக வரலாறு காணாத குளிர் மக்களின் வாழ்க்கை நிலையை முடக்கியுள்ள்ளது.மேலும் கடுங்குளிரின் தாக்கத்தால் அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இந்த குளிரின் தாக்கத்தால் விஸ்கான்சின், மிச்சிகன், அலபாமா மற்றும் மிஸிசிப்பி ஆகிய மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிகாகோ நகரில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையை முடக்கிய கடும் குளிரால் ஏரிகள் முழுவதும் உறைந்து காணப்படுகிறது. குளிரினால் விமான சேவைகள் பல இடங்களில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு முடங்கியுள்ளது. கடுங்குளிரால் தண்டவாளங்களுக்கு நெருப்பு வைத்து ரயில்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment