கஜா புயல் பாதிப்பு ...!மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்...!தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை ஆணை

கஜா புயல் தொடர்பாக நவம்பர்  26ஆம் தேதி  விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற

By venu | Published: Nov 22, 2018 11:54 AM

கஜா புயல் தொடர்பாக நவம்பர்  26ஆம் தேதி  விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் பல தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர். மேலும் அடிப்படைவசதியின்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர்.இந்நிலையில் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற மதுரை கிளை,புயல் பாதித்த  மாவட்டத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியர்கள் உடனடியாக செய்து தர வேண்டும். Image result for உயர்நீதிமன்ற மதுரை கிளை மின் இணைப்பு பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் என்ன உதவிகள் கேட்டுள்ளன?  என்று கேள்வி எழுப்பியுள்ளது.போர்க்கால அடிப்படையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வசதிகள் மக்களுக்கு சென்றதா என்பதை உறுதி செய்து நாளை மறுநாள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு  பிறப்பித்துள்ளது.அதேபோல் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் மத்திய அரசு  பதிலளிக்க வேண்டும் என்று வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த  வழக்கு விசாரனைக்கு வந்தது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை,புயல் நிவாரணப்பணிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவு பிறப்பித்துள்ளது.கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து பெற்ற உதவிகள் என்ன? என்பதையும் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.நவம்பர்  26ஆம் தேதி  விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc