அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு

அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு

டிஎன்பிஎஸ்சி தேர்வு  முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தயாநிதி மாறன் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை குற்றம்சாட்டி அளித்த பேட்டி ஒன்று வெளியானது.

இதைத்தொடர்ந்து அவரது பேட்டியானது உண்மை மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது என்றும், பொதுநலனுக்கு எதிராக வேண்டுமென்று அளிக்கப்பட்ட பேட்டி என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐபிசி 499, 500-வது பிரிவுகளின் கீழ் தயாநிதி மாறன் அவதூறாக பேசி குற்றம் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தயாநிதி மாறன் மீது 1974-ம் ஆண்டு மத்திய சட்டத்தின்கீழ் அவதூறு வழக்குத் தொடுக்க ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் தேர்வு  முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த மனுவில்,ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசிய தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube