வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே

By manikandan | Published: Oct 03, 2019 02:52 PM

தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், கிருஷ்னகிரி மாவட்டம் தளி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் ( ஈரோடு மாவட்டம்)  3 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc