தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!

நேற்று சென்னை YMCA மைதானத்தில் வேல்ஸ் பட நிறுவனத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.

By manikandan | Published: Nov 25, 2019 12:50 PM

நேற்று சென்னை YMCA மைதானத்தில் வேல்ஸ் பட நிறுவனத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அந்நிறுவனம் தயாரித்திருந்த L.K.G , கோமாளி, பப்பி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பதிவிட செய்ததால், அதன் வெற்றிவிழாவினை நேற்று பிரமாண்டமாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நடத்தினார். இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்/. இதில்,  படக்குழுவினருக்கு சிறப்பு நினைவு பரிசினை தமிழக முதல்வர் வழங்கினார். இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர், ' திரையுலகில் MGR  நடித்திருந்த காலம் பொற்காலம்  எனவும், நாடகத்தில் அவர் எடுத்திருந்த பயிற்சியும், முயற்ச்சியும் தான் அந்த நடிப்புக்கு காரணம், தற்போது வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் உலக சினிமாவிற்கு நிகராக பேசப்படும் அளவிற்கு உள்ளது. திரைப்படங்களில் தீய பழக்கவழக்கங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டாம். MGR போல நல்ல கருத்துள்ள படங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டும் எனவும், நகைச்சுவை படங்கள் மக்கள் மனதிலுள்ள கவலைகளை நீக்கும். எனவும், தீய பழக்க வழக்கங்கள் கொண்ட படங்களை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் எடுக்க வேண்டாம் எனவும் தனது கோரிக்கையை வைத்து தமிழக முதல்வர் பேசி முடித்தார்.
Step2: Place in ads Display sections

unicc