பெண்களுக்கு 41%.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி!!

  • பெண்களுக்கு 41% இடம் வழங்கப்பட்டுள்ளது.
  • உத்தரபிரதேசம் பஞ்சாப் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் மம்தா பானர்ஜி இன்று நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் பெண்களுக்கு 41% இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 41 சதவீதம் பேர் பெண்கள்.

பாராளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் – 5, அசாம் – 6, பீகார் – 2, அந்தமானில் ஒரு தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

அதேநேரம் ஒடிசாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் 10 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவித்தார்.

உத்தரபிரதேசம் பஞ்சாப் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்த வருடம் தேர்தலில் மோடி அலை எப்படி வீசுகிறது என்பதை பார்க்கத்தான் போகிறேன் என்று அவர் பேசியது மோடிக்கு எதிராக சூளுரை விட்டது போலிருந்தது.

பதிவு:

 

author avatar
Vignesh

Leave a Comment