இனி திருமலையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு..! பொங்கல்,உப்புமாவுடன் சட்னியாம்..!!அறிவித்தது தேவஸ்தானம்..!!

திருப்பதி எழுமலையானை தரிசிக்க தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர் இந்த நிலையில் தற்பொழுது கோடை விடுமுறை என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரித்திள்ள நிலையில் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்காக திருமலை தேவஸ்தானம் சார்பில் 24 மணிநேரமும் சிற்றுண்டி,டீ,காபி,பால்,மோர் போன்றவை வழங்கி வருகிறது மற்றும் அன்னதானம் முக்கிய பகுதிகளில் வழங்கபடுகிறது.

பொங்கல் , உப்புமா, ரவை ,சேமியா உள்ளிட்டவை வழங்கும் போது அதனுடன் சட்னி வழங்க வேண்டும் என பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் தேவஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று தேவஸ்தான நிர்வாகம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பொங்கல் மற்றும் உப்புமாவிற்கு வேர்கடலை சட்னி வழங்கபடும் நடைமுறை துவங்கி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment