உடுமலை ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

உடுமலை தாராபுரம் ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நேற்று நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கண்டு அம்மனின் அருளை பெற்றார்கள்.

உடுமலை ராஜகாளிம்மன் கோவிலில் கடந்த 12 ந் தேதி கணபதிஹோமம் தொடங்கியது. பின்பு நோன்பும் சாட்ட பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 19 ந் தேதி கம்பம் போடுதல் நிகழ்வு நடை பெற்றது.அந்த நிகழ்வில் பல பக்தர்கள் தீர்த்தம் எடுத்து கம்பத்தை வழிபட்டார்கள்.கடந்த 25 ந் தேதி திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரபட்டு வழிபாடு நடத்த பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த கடந்த 26ந் தேதி பக்தர்கள் பூவோடு,மாவிளக்கு மற்றும் பல நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்தார்கள்.இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உடுமலை தாராபுரம் ராஜாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நேற்று நடை பெற்றது.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பல மங்கள பொருள்களும் வழங்கப்பட்டது.  அம்மனின் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் ஆசியை பெற்றார்கள்.

Leave a Comment