விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

ஜூலை 1 முதல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,  மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் இரவு 8.40 மணிக்கு பதில் 8.45க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் அதிகாலை 5.45க்கு பதில் 5.30க்கு மதுரை வந்து சேரும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதில் 03.20க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.50 மணிக்கு வந்து சேரும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில், ராமேஸ்வரத்திலிருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக 08.55க்கு புறப்படும். திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி விரைவு ரயில் இரவு 10.30 மணிக்கு பதிலாக 10.45க்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் திருநெல்வேலிக்கு காலை 07.05 மணிக்கு பதிலாக 06.45 மணிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் கொல்லத்திலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக 11.55க்கு புறப்படும்.
செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 06.15 மணிக்கு பதிலாக மாலை 06.10க்கு புறப்படும்.  திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.