லைசென்ஸ், எப்சி புதுப்பிக்க கால அவகாசம் – தமிழக அரசு

லைசென்ஸ், எப்சி புதுப்பிக்க கால அவகாசம் – தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி வரைஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  பொதுமக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத் தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீடிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. அதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.200 கோடி கடனுதவி மற்றும் தங்கள் மாத தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் என பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதி சான்றுகளை (FC) புதுப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube