புதிய கேலக்ஸி நோட் சீரிஸ் சொன்ன டேட்டுக்கு சொன்ன டைம்ல வரும்.!

புதிய கேலக்ஸி நோட் சீரிஸ் சொன்ன டேட்டுக்கு சொன்ன டைம்ல வரும்.!

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் அறிமுகம்:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதனிடையே உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிமுகம் செய்வது தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிகழ்வு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. ஆனால் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களை ஏற்கனவே திட்டமிட்டப்படி சொன்ன தேதியில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.

தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு தகவல்:

தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி போல்டு 2 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான அறிமுக செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அறிமுக செய்வதில் மாற்றம் ஏதும் இருக்காது என்ற போதும், இது ஆன்லைன் மூலம் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரியஸின் சிறப்பு:

சாம்சங் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடல் கீக்பென்ச் தளத்தில் SM-N986U என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது தெரியவந்தது. மேலும் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் என்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.99,999 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube