காலம் சாட் விண்ணில் பாய்ந்தது.....பிரதமர் மோடி பாராட்டு...!!

நாட்டின் எல்லையை கண்காணிக்க மாணவர்கள் தயாரித்த  கலாம் சாட் என்ற செயற்கை

By Fahad | Published: Apr 06 2020 02:15 AM

நாட்டின் எல்லையை கண்காணிக்க மாணவர்கள் தயாரித்த  கலாம் சாட் என்ற செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டதுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க தமிழக மாணவர்கள் தயாரித்த காலம் சாட் என்ற செயற்கைகோள் நேற்றிரவு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் ஏவப்பட்டது. மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம் சாட் என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் விண்ணுக்கு பாய்ந்தது. இந்நிலையில் இது விண்ணுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டத்தையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.