பணி நேரத்தில் ‘டிக்-டாக்கில் ‘ ஆட்டம் போட்டு – கலெக்டரிடம் வசமாக மாட்டி கொண்ட நகரசபை ஊழியர்கள்..!

பணி நேரத்தில் ‘டிக்-டாக்கில் ‘ ஆட்டம் போட்டு – கலெக்டரிடம் வசமாக மாட்டி கொண்ட நகரசபை ஊழியர்கள்..!

தூத்துக்குடி  நகரசபை ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் ‘டிக்-டாக்‘ வீடியோவை எடுத்து அதை சமூக வளைதங்களில் வெளியிட்டுள்ளனர். இது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியின் பார்வையில் படவே வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
நகர ஊழியர்களின் இந்த டிக் டாக் நடனம் ஆனது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் நகரசபையில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர் ஒருவர் ஓய்வு பெறுவதால் அவருக்கு  நகரசபை அலுவலகத்தில் பிரிவுஉபசார விழா ஒன்று நேற்று முன்தினம் நடந்ததுள்ளது .விழா ஊழியர்களின்  விழா பணி நேரத்தில் நடந்தது.விழாவில் ஒரே ஆட்டம் பாட்டம் என்று இருந்துள்ளனர் இதனை  நகரசபை ஊழியர்கள் சிலர் தங்களது செல்போனில் பதிவேற்றி வைத்துள்ள டிக்-டாக் செயலியில் தங்களது ஆனந்த நடனத்தை   வீடியோ எடுத்து பதிவு செய்து  அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
அவர்கள் வெளியிட்ட வீடியோவில் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்வது போன்றும் சினிமா வசனங்கள் இணைக்கப்பட்டு கேலி செய்வது போலவும்  நடிகர் வடிவேலு பேசுவது போன்ற வசனங்கள் இணைக்கப்பட்டும் இதற்கு ஒரு படி மேலே இந்த  ஊழியர்தான் தாஜ்மகாலை கட்டியது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது இந்த ஊழியர் என்று பணி நேரத்தில் கும்மாளம் போட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொது மக்கள் இந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்  மக்கள் பணியை விட டிக்-டாக்’ வீடியோ எடுத்து வெளியிடுவதிலேயேநகர சபை ஊழியர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர் .நாங்கள் பிறப்பு சான்றிதழ் என்று அடிப்படை சான்றிதழ் போன்ற  பல தேவைகளுக்கு நகரசபை அலுவலகத்துக்கு சென்றால் எங்களை வீணாக அங்கு இங்கு என்று அலைக்கழிக்கிறார்கள்.கொஞ்சம் நேரம் தவறினால் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் மட்டும் பணி நேரத்தில் பணியை செய்யாமல் வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர் என்று ஆதங்கம் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கண்டன குரலை அடுத்து விஷயம் அம்மாவட்ட  நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆட்டம் போட்ட  நகரசபை ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் வீடியோ எடுத்தது உள்ளிட்டவைகளுக்கு தக்க விளக்கம் அளிக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.பணி நேரத்தில் ஆட்டம் போட்டு அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட  ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.தற்போது இந்த வீடியோ வைரளாகி வருகிறது.இதற்கு பொதுமக்கள் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
author avatar
kavitha
Join our channel google news Youtube