"டிக் டாக் " மோகத்தால் ஒடிக்கொண்டு இருந்த வெள்ளத்தில் குதித்த நபர் !

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி என்றால் அது "டிக்

By murugan | Published: Aug 10, 2019 06:02 PM

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி என்றால் அது "டிக் டாக் " இந்த செயலில் சில இளைஞர்கள் தங்களிடம் உள்ள நடனம் ஆடியும் , பாட்டு பாடியும் விடீயோக்களை பதிவேற்றி வருகின்றனர். சிலர் வித்தியாசமான விடீயோக்களை பதிவேற்ற வேண்டும் என எண்ணி ஆபத்தான இடத்திலும் , ஆபத்தான  முயற்சியையும் செய்து பலர் இறந்து உள்ளனர். தற்போது வடமாநிலங்களில் கன மழை  பெய்து வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் ஓடிக்கொண்டு இருக்கும் வெள்ளத்தில் குதித்து வித்தியாசமான முறையில் "டிக் டாக் "   வீடியோ எடுக்க  முடிவு செய்து உள்ளார். நீமச் மாவட்டத்தை சார்ந்த பப்பு சிங் என்பவர் தன் நண்பர்களிடம் போனை கொடுத்து வீடியோ எடுக்க சொல்லி ஓடிக்கொண்டு இருக்கும் வெள்ளத்தில் குதித்தார்.நீரின் வேகத்தில் நிலைகுலைந்த பப்பு நீரில் மூழ்க தொடங்கினர்.இதை தொடர்ந்து பப்பு நண்பர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் பப்புவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அடுத்து வெள்ளத்தில் செல்ஃபி மற்றும் "டிக் டாக் " போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc