டிக்டாக் பயனாளர்களுக்கு 2 பில்லியன் டாலர் அறிவித்த டிக்டாக்…!

டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள பிரபலமான டிக்டாக் பயனாளர்களுக்கு 2 பில்லியன் டாலர் அறிவித்துள்ளது.

டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார்.

டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், டிக்டாக் நிறுவனம்  ஜூலை மாத இறுதியில் 2 பில்லியன் டாலர் அறிவித்தது. இந்த பணத்தை பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய மற்றும் ஊக்கமளிக்கும் வீடீயோவை உருவாக்கும் பயனர்களுக்கு இந்த பணத்தைத் தருவதாக நேற்று டிக்டாக் அறிவித்தது. (அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என டிக்டாக் கூறியது).

இந்த அறிவிப்பு தற்போது, அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு   மட்டும் பொருந்தும். ஆனால், பின்னர் உலகளவில் இதுபோல நிதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதில், அமெரிக்காவை சார்ந்த டேவிட் டோப்ரிக், பிரிட்டானி டாம்லின்சன், செயென் ஜாஸ் வைஸ், ஜஸ்டிஸ் அலெக்சாண்டர், மைக்கேல் லு, மரிசா ரென் மற்றும் ரோஸ் ஸ்மித் உட்பட மொத்தம் 19 பயனாளர்களை டிக்டாக் அறிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் அமெரிக்காவில் பிரபலமான யூடியூபர் டேவிட் டோப்ரிக், இவருக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான டிக்டாகில் பின்தொடர்பவர்களையும், 7 மில்லியன் டாலர் நிகர மதிப்பையும் கொண்டவர். மேலும், டாக்டர் ஃபயஸ் அவசரகால மருத்துவர், இவர்  2019 ஆம் ஆண்டு டிக்டோக்கைத் தொடங்கியதிலிருந்து 500,000 க்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மேலும், இவரது வீடியோ, சுகாதாரத்துறையில் பொதுவான தவறான எண்ணங்களை பற்றியும், அவரது பார்வையாளர்களுக்கு  அன்றாட வாழ்க்கையைப் பற்றி இடம்பெற்றியிருக்கும். மாட் கிரேசியா இவர் ஒரு ஒரு தொழில்முனைவோர் ஆவார். அவர் தன்னை பின்தொடர்ந்து வரும் 13 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு  வணிக திறன்களின் டிப்ஸ் கூறி வருகிறார்.

இது போன்றவர்களுக்கு டிக்டாக்  2 பில்லியன் டாலரை அறிவித்துள்ளது. ஏதன் அடிப்படையில் டிக் இந்த பணத்தை தருகிறது என்ற அறிவிப்பு எதுவும் வெளியவில்லை.

 

author avatar
murugan