வில்லனாக மீண்டும் களமிறங்கும் துப்பறிவாளன் பட வில்லன்..!

வில்லனாக மீண்டும் களமிறங்கும் துப்பறிவாளன் பட வில்லன்..!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ளப் படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு  அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு டாக்டர் என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டராக நடிக்கவுள்ளாராம்.

மேலும், அனிருத் இசையமைப்பில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிக்பாஸ் கவின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.சிவர்கார்த்திகேயனிற்கு வில்லனாக நடிகர் வினய் ராய் நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. இவர், அரண்மனை, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

Join our channel google news Youtube