தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

  • தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்தீவு பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழையும், சென்னை மாநகரின் நுங்கம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 22 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.