தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

By venu | Published: Oct 26, 2019 01:06 PM

தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும்.தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc