தமிழகம், புதுவையில் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தமிழகம், புதுவையில் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய

By venu | Published: Aug 17, 2019 12:22 PM

தமிழகம், புதுவையில் மிதமான மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் பேட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் பல இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும்.வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கடலூர், அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார் .  
Step2: Place in ads Display sections

unicc