பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பிரபல

By Dinasuvadu desk | Published: Sep 29, 2018 07:42 PM

தேனி மாவட்டத்தில் உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பிரபல ரவுடியாக அறியப்படும் இவர் மீது, தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை சிறையும் சென்றுள்ளார்.
சமீபத்தில், மதுரை சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவுக்கு ஆடியோ மூலம் நாகராஜ் மிரட்டல் விடுத்திருந்தார். பின்னர் தேனி காவல்நிலைய ஆய்வாளருக்கும் மிரட்டல் விடுத்தார். இதை தொடர்ந்து, இவரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முடிந்தால் தன்னை பிடியுங்கள் என போலீசாருக்கு நாகராஜும் சவால் விடுத்திருந்தார்.. தலைமறைவாக இருந்த புல்லட் நாகராஜ் போலீசாரிடம் பிடிபட்டார்.
காவல் துறை அதிகாரியை மிரட்டியதாக கைதான ரவுடி புல்லட் நாகராஜ் மீது குண்டர் சட்டபடி நடவடிக்கை எடுக்க தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். DINASUVADU 
Step2: Place in ads Display sections

unicc