கொரோனா.! வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய மூன்று பேரை கைது.!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா  வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய மூன்று பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.மேலும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.

தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் யாரேனும் கொரோனா வைரஸ் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan