அ.ம.மு.க.வில் இருந்து விலக விரும்புவர்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம்-தினகரன்

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .

இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி திமுகவிற்கு சென்றார்.இது தினகரன் கட்சிக்கு பின்னடைவாக இருந்தாலும் அதை சமாளித்து மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

ஆனால் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அ.ம.மு.க.வில் இருந்து விலக விரும்புவர்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.நிச்சயம் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் என்றும்  அப்போது எங்கள் சீலிப்பர் செல்கள் ஆக்டிவேட்டாகி செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment