டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாகவே பரிசோதனை செய்ய முன் வர வேண்டும்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் நடந்த மாநாட்டில், சுமார் 1500 பேர் அந்த  கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1331 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 515 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் டெல்லியிலேயே இருக்கிறார்கள். 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.