தொடர் கொலைகள் காரணமாக தூத்துக்குடி நெல்லை ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகிறது .இந்த ஒரு

By Fahad | Published: Mar 30 2020 04:25 PM

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகிறது .இந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது அதில் தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் நடந்த இரட்டைக்கொலை அதிர்ச்சியை ஏற்படத்தியது.அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக  மற்றொரு கொலை நடந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 19 கொலைகள் நடந்துள்ளது இந்நிலையில் தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்கள் நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களை மாற்ற டிஐஜி பிரவீன் குமார் அபிநவு உத்திரவிட்டுள்ளார். தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கிருஷ்ணகுமார் தென்பாகம் குற்றப்பிரிவு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடபாக காவல் நிலைய ஆய்வாளராக இருந்த அருள் வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா, வடபாகம் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

More News From Thoothukudi police