கொரோனா சிகிச்சை பெற்றுவந்த தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரி இன்று உயிரிழந்தார்.!

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரி இன்று உயிரிழந்தார்.!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி கு.பானுமதி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான கு.பானுமதி இன்று உயிரிழந்தார். அவருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு இளையராஜா, மாலதி, இசையமுதன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அவரின் இறப்புக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, டிடிவி.தினகரன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Latest Posts

#IPL2020: தாண்டவம் ஆடிய ஹர்திக்.. 195 ரன்கள் குவித்த மும்பை..!
#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!
#IPL2020: அரைசதம் விளாசிய கெய்க்வாட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி.!
அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா பரவும் அபாயம்.!
ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ள சில்லுக்கருப்பட்டி.!
பந்துவீச்சில் மிரட்டிய சென்னை.. 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர்!
ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக "என் தோழி".!
7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!
திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!